Thursday, March 8, 2012

இமைகளுக்கு இடையில் நீ




பலமுறை கேட்டும்
நீ
இதற்கு பதில் சொன்னதில்லை.
ஒரு வேளை
உன் அழகின் ரகசியம்
இதுதானோ?





இருள் வரும்போதெல்லாம் 
இடறி விழுகிறேன்
இமைகளுக்கு இடையில்
நீ






உன் ஒவ்வொரு
கண் சிமிட்டலும்
எனக்கு கவிதை



சமயங்களில்
நான் உறங்குவதில்லை,
உன் நினைவு கலைந்துவிடுமோ
என்ற கவலையில்.






உனக்கும் எனக்குமான தூரத்தை
இதுவரை
நான் கணக்கிட்டதில்லை.
அதுதான்
உன்னை நினைக்க
ஆரம்பித்த மாத்திரத்தில் சட்டென
என் இமைகளுக்கிடையில்
இடம் பெயர்ந்து விடுகிறாயே?


.

2 comments:

  1. சிறைப் பட்ட கவிதைகள் அப்பப்ப ரிலீஸா...? பலே பலே!

    ReplyDelete
  2. எழுதி வைத்த அத்தனையும் இனிமேல் தொடர்ந்து ரிலீஸ் ஆகும்.

    ReplyDelete