Tuesday, December 19, 2006

1001 அரேபிய இரவுகள்

கணமாய் கழியும்
என் பொழுதுகளை லேசாக்குவது
உன்னிடமிருந்து
அவ்வப்போது வரும்
செல்போன் சிணுங்கல்கள்தான்


நள்ளிரவு பாலைவனக் காற்று
நரம்புகள் வரை தாக்கினாலும்
உன்னை சுமக்கும்
என் இதயப் பகுதி
எப்போதும் சூடாய்...



ஆயிரம் வகையான
அரேபிய உணவுகளில் நிச்சயமாக இல்லை,
உயிர் கொடுத்து
உலை ஏற்றி
பிரியமுடன் நீ
பிசைந்து கொடுக்கும்
வெறும் சாதத்தின் சுவை.



தொலைக்காட்சியில்
தமிழ் சேனல்கள் பார்க்கும்போது
எனக்குள் ஒரு பரவசம்.
நான் பார்த்துக்கொண்டிருக்கும்
திரைப்படத்தை நீயும்
பார்த்துக்கொண்டிருக்கலாம் என்பதால்



பிரிவை சுமையாக
நினைக்கவில்லை நான்.
பிரிந்த கணம்
நீ சிந்திய
கண்ணீர்த் துளிகளைதான்
சுமக்க முடியாமல்
தவிக்கிறது நெஞ்சம்.



காய்ந்து போன
இந்த பூமியில் எனக்கு கிடைத்த
ஒரே நீர்ச்சுனை
உன் நினைவுகள் தான்



இண்டர்நெட்டிலும் ஈமெயிலிலும்
நாம் பரிமாறிக்கொள்ளும்
மின்னனு வார்த்தைகள்
உணரக்கூடுமா நம் வலியினை ?


- மனைவியை பிரிந்து வாழு(டு)ம் வளைகுடா நாட்டு தமிழர்களுக்கு 


No comments:

Post a Comment