காதலுக்கு கண் இல்லை
என்றுதானே சொன்னார்கள்.
உன் கண்ணில் ஏன்
காதலே இல்லை?
மழை பெய்து முடிந்தபின்
எழுமே மண்வாசனை?
அப்படித்தான்
உலகம் உறங்கிய பிறகு
என்னிலிருந்து எழுந்துகொள்கிறது
உன் நினைவுகள்.
பல சமயங்களில்
கவிதை எழுதிகொண்டிருப்பேன்
உன் பார்வையைபோல.
சில சமயங்களில் சிந்தித்துகொண்டிருப்பேன்
உன் சிரிப்பைபோல
அடிக்கடி அழுதுகொண்டிருப்பேன்
உன் அலட்சியத்தைபோல

உன்னை காதலிக்க
ஆரம்பித்ததிலிருந்து
தூக்கத்தில் கனவுகள் வருவதில்லை.
விழித்திருக்கும்போதுதான்
எத்தனை கனவு?

நாளுக்கு நாள்
நான் எடை குறைந்து வருகிறேன்.
ஏன் அன்பே
நீ சரியாக சாப்பிடுவதில்லையா?
அந்தக் காதலி இப்பவும் இருக்காளா? அப்டினா ஏன் கவிதைகளைக் காணோம்?
ReplyDeleteDid you see that girl…nisha
ReplyDelete