செய்திகள் 2030
இது ஏதோ ஒரு செய்தி சேனலின்(அல்லது Web சேனல்) 2030ம் ஆண்டு செய்திகள்
- சென்னை மவுண்ட்ரோட்டில் இருக்கும் பழம் பெரும் கட்டிடமான LIC நாளை குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. இந்த தகவலை சென்னை மேயர் நேற்று அறிவித்தார். தற்போது சென்னையில் இருக்கும் மிகச்சிறிய கட்டிடம் LIC என்பது குறிப்பிடதக்கது.
- எந்திரன் என்ற தமிழ்ப்படம் முற்றிலுமாக எடுக்கப்பட்டுவிட்டதாகவும் விரைவில் ரிலீஸ் ஆகும் என டைரக்டர் ஷங்கர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
- நடிகர் 'பைலட்' பிரபாகரன் 2031 ல் ஆட்சியை பிடிப்போம் என தனது Blogல் தெரிவித்துள்ளார். இவரது தந்தை 'கேப்டன்' விஜயகாந்தின் தே.தி.மு.க கட்சியின் துணைத்தலைவராக பிரபாகரன் இன்று பொறுப்பேற்றார்.
- 2040 ல் இந்தியா வல்லரசாகும் என குடியரசு தலைவர் அப்துல் வஹாப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றி இவர் கூறியிருப்பதாவது சிறந்த சிந்தனை உள்ள ரோபோக்கள்(Robots) நம் நாட்டில் அதிகம் உள்ளதாகவும் இவர்கள் இந்தியாவின் வருங்கால தூண்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
- ஸ்விஸ் வங்கியிலிருந்து இந்தியர்களின் கறுப்பு பணம் விரைவில் இந்தியாவிற்க்கு கொண்டுவரப்படும் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
- நேற்று நடந்த உலக்கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா அண்டார்டிகா அணியிடம் தோல்வி அடைந்தது. மொத்தம் 11 பேரே வசிக்கும் அண்டார்டிகாவில் 11 பேரும் கிரிக்கெட் விளையாடுபவர்கள் எனபது குறிப்பிடத்தக்கது. இது பற்றி இந்திய கேப்டன் MS ஆணி 'மதிய உணவில் இந்திய வீரர்கள் உருளைக்கிழங்கு சாப்பிட்டதே அணியின் தோல்விக்கு காரணம்' என தெரிவித்தார்.
- சுவாமி சொத்யானந்தா காவல் நிலையத்தில் புகார். இது குறித்து கூறப்படுவதாவது நடிகை அஞ்சிதா சுவாமியின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அதிர்ச்சியான சுவாமிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது பற்றி சொத்யானந்தா தெரிவிக்கையில் 'இது சாமியார்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி' என்றார்.
- சென்ற வாரம் ரீலிஸான புறா படம் உலகெங்கும் வெற்றி நடைப்போடுவதாக அப்பட நாயகன் 'முதிர்' தளபதி விஜய் தெரிவித்துள்ளார். இது இவரது 200வது படம். தமிழில் 200 படங்களில் கதாநாயகனாக நடித்து சாதனை புரிந்துள்ளார். மேலும் ஒரே கதையை வைத்து 150 படங்கள் நடித்து உலக சாதனை படைத்தற்காக சமீபத்தில் தமிழக அரசின் உயரிய விருதை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது 108வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். தனது கொள்ளுப்பேரனை துணை முதல்வராக அறிவித்தார். இதனால் தனது வேலைப் பளு குறையும் என தெரிவித்த முதல்வர் தான் விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
//இதனால் தனது வேளைப் பளு குறையும் என தெரிவித்த முதல்வர் தான் விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.//
ReplyDeleteரொம்ப பயங்கரமாவுள்ள இருக்கு!!!
ரொம்ப தில்லுதான்!
அப்புறம் எல்லா நியூஸுக்கும்
படங்கள் கிடைக்கலியா?
//
ReplyDelete'மதிய உணவில் இந்திய வீரர்கள் உருளைக்கிழங்கு சாப்பிட்டதே அணியின் தோல்விக்கு காரணம்'
//
அருமை நண்பரே.
நிஜாம்! சும்மா ஒரு ஜாலிக்குத்தான் எழுதினேன்.
ReplyDeleteநன்றி ராஜ்மோகன்!