உன் ஒரு பார்வையில்
ஆயிரம் அர்த்தங்கள் உணர்ந்தேன். என் ஆயிரம் பார்வைகளில் ஒன்றைக் கூட உன்னால் உணரமுடியவில்லையே ஏன்? |
ரோஜாவையெல்லாம் கூந்தலில்தான்
சூடிக்கொள்கிறாய். முட்களை மட்டும் ஏனடி மனதில்? |
உன் மொழிகள் எழுதத்தான்
டைரி வாங்கினேன். உன் மெளனங்களைத்தான் என்னால் எழுதமுடிகிறது. |
எத்தனை கடிதங்கள் எழுதியும்
என் காதலை நீ ஏற்கவில்லை. ஒருவேளை ஏற்றிருக்கலாம் ஒன்றையாவது உன்னிடம் கொடுத்திருந்தால். |
உன்னை முதன்முதலாக சந்தித்தது
எனக்கு நினைவில்லை. ஆனால் அப்போதும் என்னைப் பார்க்காதவளாகத்தான் நீ இருந்திருப்பாய். |
vaalthikkal
ReplyDeleteசெம ஸ்பீடு போல வருஷத்துக்கு 1 ?
ReplyDeleteஹா ஹா
ReplyDeleteஇந்த வருடம் நிறைய எழுத முயற்சி செய்கிறேன்.
ஒவ்வொரு நான்கு வரிகளுக்கும் ஒரு படம்வீதம்
ReplyDeleteகவி வரிகளுக்கேற்ப இணைத்துள்ளீர்கள்.
நல்ல லேஅவுட்! கவிதையும் அருமை!
ஓஒ... காதலியைப் பற்றிய காதல் கவிதைகளா?
ReplyDeleteநடத்துங்க்...
(கமெண்ட் பகுதி இல்லையே, இன்றைய மே 30
இடுகையில்?)
piniteengaa
ReplyDelete