நீயும் நானும்.
நம் காதல் மட்டும்
அழகிய பெண்ணின்
ஆணவம் போல
_______________________________________________
உனக்கு பிடித்தது எல்லாம்
எனக்கு பிடிக்கிறது.
உன்னகு பிடிக்காதது எதுவும்
எனக்கு பிடிக்கவில்லை.
என்னையும் சேர்த்து.
_______________________________________________
உன்னை காதலித்த நேரத்தை விட
உனக்காக காத்திருந்த
நேரம்தான் அதிகம்.
_______________________________________________
பெரும்பாலும்
நான் உறங்குவதில்லை.
உன் நினைவு
கலைந்துவிடுமோ
என்ற கவலையில்.
_______________________________________________
தேடிப்பலனில்லை
உன்னிடம் தொலைந்துபோன
என் இதயத்தை.